நடப்பு நிகழ்வுகள் – 16 செப்டம்பர் 2023
தேசிய செய்திகள்
இந்தியாவும் ஜப்பானும் இருதரப்பு இணைய ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டம்.
- இந்தியா மற்றும் ஜப்பான் என இரு நாட்டு அரசாங்கங்களும் செப்டம்பர் 14 அன்று இருதரப்பு இணைய ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகள் வளர்ச்சி மற்றும் அதன் மேம்பாடு குறித்து விவாதித்தன. இதில் இந்திய அரசாங்கம் சார்பில் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் முவான்புயி சாயாவி தலைமை வகித்தார்.
- இணைய பாதுகாப்பு மற்றும் 5G தொழில்நுட்பம் உள்ளிட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மத்திய துறைகளில் அடைந்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து அதனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த கூட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். மேலும் 2024 ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடைபெறும் ஆறாவது இந்தியா-ஜப்பான் சைபர் கூட்டமானது நடைப்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க DMRC மற்றும் BEL ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
- இந்தியாவின் உள்நாட்டு தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குதல் மற்றும் அதற்கான வழிமுறைகளை வகுத்தல் ஆகியவற்றிற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன்(BEL) டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்(DMRC) ஆனது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) மேற்கொண்டுள்ளது.
- இது உள்நாட்டு ரயில் கட்டுப்பாட்டு சிக்னலிங் அமைப்புகளின் துறையில் தன்னம்பிக்கை, மேம்பாடு மற்றும் புதுமைகளுக்கான சகாப்தத்தை வளர்க்கும் என BEL நிறுவனம் வெளியிட்டுள்ள செப்டம்பர் 2023 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான ICAR-CIBA இன் இறால் விவசாயிகள் மாநாட்டின் இரண்டாம் பதிப்பை மத்திய அமைச்சர் தொங்கி வைத்துள்ளார்.
- மத்திய கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா செப்டம்பர் 14 2023 அன்று குஜராத் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான ICAR-CIBA இறால் விவசாயிகள் மாநாட்டின் இரண்டாம் பதிப்பை தொடங்கி வைத்துள்ளார்.
- அம்மாநிலத்தில் உள்ள நவ்சாரி வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாநாடானது நடைபெறுகிறது. மேலும் இதில் அம்மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் சுமார் 410 நீர்வாழ் விவசாயிகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தோ-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மாநாடு(IPAC) புது தில்லியில் தொடங்க உள்ளது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இந்தோ-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மாநாட்டானது(IPAC) இந்தியாவின் தேசிய தலைநகரமான புது தில்லியில் வரும் செப்டம்பர் 25 இல் தொடங்க உள்ளது. இந்த மாநாடானது செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 27 வரை நடைப்பெறக்கூடிய இரண்டு நாள் மாநாடாகும்.
- இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதியான எஸ்.எம். ஷஃபியுதீன் அவர்களுக்கு இந்திய ராணுவத் தலைமைத் தளபதியான மனோஜ் பாண்டே செப்டம்பர் 14 அன்று அழைப்பு விடுத்துள்ளார்.
- இந்த அழைப்பின் மூலம், வங்கதேசம் மற்றும் இந்திய ராணுவங்களுக்கு இடையே தற்போதுள்ள உறவு எதிர்காலத்தில் வலுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிராந்திய பலதரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதமர் மோடி துவாரகாவில் செப்டம்பர் 17 ஆம் தேதி ‘யஷோபூமி’யை அர்ப்பணிக்க உள்ளார்.
- குஜாரத்தின் முக்கிய நகரமான துவாரகாவில் உள்ள ‘யஷோபூமி’யை பிரதமர் மோடி செப்டம்பர் 17 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என குஜராத் மாநில அரசங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ‘யஷோபோமி’ எனப்படுவது இந்திய கண்காட்சி மற்றும் சர்வதேச மாநாடு மையத்தின் 1-ஆம் கட்டத்தின் செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அந்த சிறப்பு நிகழ்ச்சியில் டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை துவாரகா செக்டார் 21ல் இருந்து துவாரகா செக்டார் 25 புதிய மெட்ரோ நிலையம் வரை நீட்டிக்கும் திட்டத்தையும் அவர் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Hygenco கையெழுத்திட்டுள்ளது.
- பச்சை ஹைட்ரஜன் திறன்களை பயன்படுத்தும் ஹைஜென்கோ கிரீன் எனர்ஜிஸ் நிறுவனமானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை ஆராய்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்காக அல் ஜோமைஹ் எனர்ஜி அண்ட் வாட்டர் நிறுவனத்துடன்(AEW) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
- இந்த ஒப்பந்தமானது சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியா-சவுதி முதலீட்டு மன்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநில செய்திகள்
ரூ.2,600 கோடி முதலீடு மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உத்தரகாண்ட் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
- செப்டம்பர் 14 அன்று தேசிய தலைநகரமான புது டெல்லியில் நடைபெற்ற உத்தரகாண்ட் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடானது தொடங்குகியது. இந்த நிகழ்ச்சியில் ரிசார்ட் இந்தியா மற்றும் மஹிந்திரா ஹாலிடேஸ் ஆகிய நிறுவனத்துடன் கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசாங்கமானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இது மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை மேற்கொள்ளுதல், கிராம மற்றும் நகர மேலாண்மை, விடுதிகள் மற்றும் நீர்நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வரலாற்று சிறப்புமிக்க சங்கிரி தேவ்தா மேளா ஆனது உதம்பூரில் தொடங்கியுள்ளது.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கிரி தேவ்தா மேளா என்ற முக்கிய விழாவானது செப்டம்பர் 15, 2023 அன்று உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பிளாக் பஞ்சரி பகுதியின் மீர் என்ற கிராமத்தில் தொடங்கியுள்ளதாகும்.
- இந்த மேளாவானது மூன்று நாள் நடைபெறக்கூடியதாகும். இதன் முதல் நாளில், ஒரு “டங்கல்” வெகு சிறப்பாக நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் விழாவின் போது மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறை சார்ந்த அரங்கங்கள் இந்த மேளாவில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில கால்பந்தாட்டத்தை மேம்படுத்த மேற்கு வங்க அரசும், லா லிகா அமைப்பும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- மாநில கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்த மேற்கு வங்க மாநில அரசாங்கமும் லா லிகா அமைப்பும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று ஸ்பெயின் கால்பந்து லீக் அமைப்பானது செப்டம்பர் 15 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- மாட்ரிட்டில் நடைபெற்ற லா லிகா தலைவர் ஜேவியர் டெபாஸ் மற்றும் இந்திய மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
- செப்டம்பர் 15, 2023 அன்று தமிழக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின்(திமுக) நிறுவனருமான சி.என் அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய முன்னெடுப்பாக “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத்” தொடங்கி வைத்துள்ளார்.
- தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 1.06 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் சுமார் ₹1,000 உரிமை மானியமாக வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நியமனங்கள்
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக சந்தோஷ் ஜா நியமனம்.
- இலங்கைக்கான இந்தியாவின் அடுத்த மற்றும் புதிய உயர் ஆணையராக சந்தோஷ் ஜா என்பவரை நியமித்திட்டுள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் செப்டம்பர் 14 அன்று வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ள்ளது.
- இவர் 1993 ஆம் ஆண்டின் IFS அதிகாரி ஆவார் மேலும் தற்போது இவர் பெல்ஜியம் நாட்டிற்கான இந்திய தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் இதற்கு முன்பாக லக்சம்பர்க், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய அரசாங்கத்தின் தூதராக இவர் பணியாற்றியுள்ளார் என்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மாஸ்டர்கார்டு இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரஜ்னிஷ் நியமனம்.
- பணம் செலுத்துதல் மற்றும் வழங்குதல் துறையில் உலகளாவிய தொழில்நுட்ப சேவை வழங்குனரான மாஸ்டர்கார்டு நிறுவனமானது, புகழ்பெற்ற பாரத ஸ்டேட் வங்கியின்(SBI) முன்னாள் தலைவரான ரஜ்னிஷ் குமார் மாஸ்டர்கார்டு இந்தியா பிரிவின் தலைவராக நியமிப்பதாக செப்டம்பர் 2023 இல் அறிவித்துள்ளது.
- இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வங்கித் துறையைச் சேர்ந்த வீரர்களில் ஒருவரான இவர் தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Alkem Laboratories நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக விகாஸ் குப்தா நியமனம்.
- உலகளாவிய புகழ்பெற்ற Alkem Laboratories நிறுவனமானது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக டாக்டர் விகாஸ் குப்தா என்பவரை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் செப்டம்பர் 15 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- இவர் இந்த பதவியில் செப்டம்பர் 22 அன்று பொறுப்பேற்பார் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இவர் இந்த பதவிக்கு தேனிர்த்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் தனது முக்கிய நடவடிக்கைகள் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விருதுகள்
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த CFO விருதினை SJVN இயக்குனர் அகிலேஷ்வர் பெற்றுள்ளார்.
- தேசிய தலைநகரமான புதுதில்லியில் செப்டம்பர் 14 2023 அன்று தலால் ஸ்ட்ரீட் இன்வெஸ்ட்மென்ட் ஜர்னல்(DSIJ) அமைப்பினால் SJVN நிறுவனத்தின் இயக்குனரான அகிலேஷ்வர் சிங் அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான மின் துறையில் சிறந்த CFO என்ற பிரிவின் கீழ் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- இவரின் நிதி நிபுணத்துவத்தின் கீழ் SJVN நிறுவனத்தின் சந்தை மூலதனம் 54.41% சதவீதமும் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 32.67% சதவீதமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் இந்த தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISG-L&T தொழில்நுட்ப வழங்குநர் மற்றும் CNBC TV-18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இரண்டாவது வருடாந்திர டிஜிட்டல் பொறியியல் விருதுகளை அறிமுகப்படுத்த திட்டம்.
- உலகளாவிய முன்னணி டிஜிட்டல் பொறியியல் மற்றும் R&D சேவைகள் வழங்குனரான L&T தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவில் ஆராய்ச்சி, ஆலோசனை நிறுவனமான CNBC TV-18 மற்றும் இன்பர்மேஷன் சர்வீசஸ் குரூப்(ISG) ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகளாவிய இரண்டாம் ஆண்டு டிஜிட்டல் பொறியியல் விருதுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செப்டம்பர் 15 2023 அன்று அறிவித்துள்ளது.
- டிஜிட்டல் பொறியியலை மேம்படுத்தும் மாற்றத்தக்க யோசனைகள் மூலம் சிறந்த மற்றும் நிலையான உலகத்தை வடிவமைக்கும் வணிக மற்றும் தொழில்நுட்ப நுணுக்க விவகாரங்களை அங்கீகரிப்பதாக இந்த விருதுகளானது அமைகின்றன.
முக்கிய தினம்
உலக ஓசோன் தினம் 2023
- ஓசோன் படலத்தின் அழிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதியானது உலக ஓசோன் தினமாக கடைப்பிடிக்கப்பிறது.
- இது 1987 ஆம் ஆண்டில் ஓசோன் படலத்தை அழிக்கும் பொருட்களின் வழிமுறைகள் குறித்த மாண்ட்ரீல் நெறிமுறையில் கையொப்பமிட்ட முக்கிய பிரகடன தேதியை நினைவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓசோன் படலம்(O3) சூரியனின் கடும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சின் பெரும் பகுதியை தடுத்து கண்புரை மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து உலக மக்களைப் பாதுகாக்கிறது.