நாடு முழுவதும் அதிரடியாக உயர்ந்த விலைவாசி – பிரதமர் எச்சரிக்கை!
கனடாவில் உணவு பொருள்கள் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் அதனை குறைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
விலை ஏற்றம்:
கனடாவில் உணவு பொருள்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இருந்ததை விட ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது பொதுவான பணவீக்க விகிதமான 3.3 சதவீதத்தை விட அதிகம் ஆகும். அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு காரணிகள், உற்பத்தி மற்றும் சப்ளை செலவு அதிகரிப்பு ஆகியவை இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் ஆகும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், விலைவாசி உயர்விற்கு தீர்வு காண வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என வால்மார்ட், காஸ்ட்கோ உள்ளிட்ட 5 பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களிடம் கேட்க இருக்கிறேன். மேலும் அவர்களின் திட்டம் நடுத்தர மக்களுக்கும், அதில் சேர கடினமாக உழைக்கும் மக்களுக்கும் உண்மையான நிரவாரணம் வழங்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
ஆவினின் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி!
அதாவது அவர்களுக்கு வரிவிதிப்பு உட்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து வசூலிக்கும் கார்பன் வரியை தற்காலிகமாக நீக்குவது, மளிகை கடைக்காரர்களுக்கு ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் செலவை அதிகரிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் இலக்குகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் விலைவாசியை குறைக்கலாம் என கனடாவின் சில்லறை விற்பனை கவுன்சில் தெரிவித்துள்ளது