
நாடு முழுவதும் மீண்டும் 150 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!
நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
மருத்துவ கல்லூரிகள்:
நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையின் விதிகளின்படி 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதாவது, போதிய பேராசிரியர்களின் வருகை மருத்துவக் கல்லூரிகளில் இல்லாதது, ஆதாரங்களுடன் இணைந்து பயோமெட்ரிக் வருகை பதிவிடாதது, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணத்தினால் இந்த நாடு முழுவதும் உள்ள 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 40 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தில் மட்டுமே 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
ICF Chennai வேலைவாய்ப்பு 2023 – 782 Apprentice காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.7000/-
இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ரத்து செய்யப்படும் மருத்துவக் கல்லூரிகள் அடுத்த 30 நாட்களுக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து அதனை நீக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அந்த மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு செய்யப்பட்டால் ஒன்றிய சுகாதார அமைச்சகத்திடம் தகுந்த காரணங்களுடன் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.