நடப்பு நிகழ்வுகள் – 15 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 15 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 15 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 15 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

சிறப்பு பிரச்சாரம் 3.0ஐ கண்காணிப்பதற்கான இணைய தளத்தை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களால் சிறப்பு பிரச்சாரம் 3.0 ஐ கண்காணிப்பதற்கான பிரத்யேயமான இணையதளத்தை(https://scdpm.nic.in) செப்டம்பர் 14 2023 அன்று தொடங்கியுள்ளார்.
  • ஸ்வச்சதா மற்றும் செறிவூட்டும் நவீன அணுகுமுறையுடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலுவைத் தொகையைக் குறைப்பதை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை சிறப்பு பிரச்சாரம் 3.0 ஐ மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்யமந்திரி ஷெஹ்ரி ஆவாஸ் திட்டத்திற்கான வலைத்தளத்தை ஹரியானா முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • ஹரியானா முதல்வர் மனோகர் லால் செப்டம்பர் 13 2023 அன்று முக்யமந்திரி ஷெஹ்ரி ஆவாஸ் திட்டத்திற்கான வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது மாநில பொருளாதாரத்தில் நலிவடைந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் மற்றும் மக்களுக்கும் ஒரு அரசாங்க வழிமுறைகளை வகுத்தளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொலைநோக்கு முயற்சி என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • மேலும் இது நவீன மற்றும் திறமையான வீட்டு வசதி தீர்வுகளுக்கான மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் அனைத்து கட்டுமான செயல்முறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டின் சரக்கு போக்குவரத்தில் மூன்றாவது இடத்தை விசாகப்பட்டினம் துறைமுக ஆணையமானது பெற்றுள்ளது.

  • கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், துறைமுகங்களுக்கான மத்திய அமைச்சகமானது சமீபத்தில் நடத்திய மதிப்பாய்வில், விசாகப்பட்டின துறைமுக ஆணையமானது(VPA) நாட்டின் சரக்கு போக்குவரத்தின் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என சமீபத்திய மத்திய அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், துறைமுகங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் சமீபத்தில் 2023 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான துறைமுகங்களின் செயல்திறன் குறித்து ஆய்வு நடத்தி இந்த பட்டியலானது உருவாக்கப்பட்டுள்ளதாகும்.

Suven Pharmaceuticals நிறுவனத்தில் ரூ.9589 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளுக்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • பிரதமர் திரு மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது செப்டம்பர் 13 2023 அன்று சைப்ரஸ் பிராந்தியத்தில் உள்ள சுவென் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட ரூ.9589 கோடி ருபாய் மதிப்பிலான அந்நிய முதலீட்டுக்கான முன்மொழிவு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டமானது CCI, SEBI, RBI மற்றும் பிற வணிக தொடர்புடைய நிறுவனங்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் சம்பந்தப்பட்ட துறைகள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் முன்மொழிவை ஆய்வு செய்த பிறகு இந்த ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது எனவும் இது சம்பந்தமாக பொருந்தக்கூடிய அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் நிறைவேற்றத்திற்கு இது உட்பட்டது என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

திவ்யா கலாமேளா 2023 ஆனது செப்டம்பர் 15 இல் நடத்த திட்டம்.

  • இந்தியா முழுவதும் உள்ள திவ்யாங் கைவினைஞர்/ தொழில்முனைவோர்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனைக் கண்காணிப்பதை நோக்கமாக கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் துறையானது(திவ்யாங்ஜன்)  ‘திவ்ய கலா மேளா 2023’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த நிகழ்ச்சியானது செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 24 வரை உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகும். மேலும் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட கைவினைப் பொருட்கள், எம்பிராய்டரி வேலைகள், கைத்தறிகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து துடிப்பான பொருட்கள் ஒன்றாகக் காணப்படுவதால், இந்த நிகழ்ச்சியானது பார்வையாளர்களுக்கு ஒரு பரவசமான அனுபவத்தை வழங்குவதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரதான் ஸ்கில் இந்தியா டிஜிட்டல் என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • ஒவ்வொரு இந்திய தொழில் முனைவோருக்கும் ஆதரவு, தரமான திறன் மேம்பாடு மற்றும் பொருத்தமான வாய்ப்புகள் ஆகியவற்றை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான், செப்டம்பர் 13 அன்று ஸ்கில் இந்தியா டிஜிட்டல் (SID) என்ற ஒரு விரிவான டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இது நாட்டின் வேலைவாய்ப்பு, திறன்கள், கல்வி, மற்றும் தொழில்முனைவோர் நிலப்பரப்பு, தொழில் சார்ந்த திறன் படிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் ஆதரவை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திகள்

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்தினம் பொறுப்பேற்பு.

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரில் பிறந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம், மாநிலத் தலைவர் பதவியில் அதிகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக செப்டம்பர் 14 2023 அன்று பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 66 வயதான இவர் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் உள்ளூர் வாக்காளர்கள் அளித்த 2.48 மில்லியன் வாக்குகளில் கிட்டத்தட்ட 70.4 சதவீதத்தை பெற்று வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிங்கப்பூரின் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக உள்ள பெரும்பான்மையான சீன சமூகமானது இவரை ஆதரித்ததுள்ளது என்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தலிபான்களின் ஆட்சியின் கீழ் புதிய ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான  தூதரை சீனா முதல் நாடாக நியமித்துள்ளது.

  • ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் நடைபெற்ற ஒரு விழாவில் அந்த நாட்டிற்கான அதிகாரப்பூர்வ ராஜதந்திர தூதராக ஜாவோ ஷெங் என்பவரை நியமித்துள்ளது. இதன் மூலம் தலிபான் நாட்டை கையகப்படுத்தப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தானுக்கான புதிய தூதரை முறையாக மற்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு என்ற பெயரை சீனா பெற்றுள்ளது.
  • இந்த நிகழ்வு சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பிறகு இது ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதரின் “வழக்கமான சுழற்சி” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தலிபான்களை எந்த வெளிநாட்டு அரசாங்கமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மாநில செய்திகள்

நான்காவது ஜி 20 உலகளாவிய கூட்டுறவு மேன்மைக்கான நிதி சேர்க்கை கூட்டமானது மும்பையில் தொடக்கம்.

  • நான்காவது ஜி 20 உலகளாவிய கூட்டுறவு மேன்மைக்கான நிதிச் சேர்க்கை கூட்டமானது மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் செப்டம்பர் 14 2023 அன்று தொடங்குகிறது. 
  • இந்த கூட்டமானது 3 நாள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகும்.  SME நிதி மற்றும் டிஜிட்டல் நிதி உள்ளடக்கம் ஆகிய பகுதிகளில் G20 இந்தியா தலைமையின் கீழ் நிதி உள்ளடக்கல் நிகழ்ச்சி நிரலின் தற்போதைய பணிகள் குறித்த விவாதங்கள் நடைபெறுவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாகாலாந்து ஆளுநர் கோஹிமாவில் ஆயுஷ்மான் பவ் என்ற முக்கிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

  • நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் லா கணேசன் செப்டம்பர் 13 2023 அன்று ஆயுஷ்மான் பவ் என்ற நாட்டின் முக்கிய முன்னெடுப்பு பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த முன்னெடுப்பானது அம்மாநில தலைநகரமான கோஹிமாவில் உள்ள ராஜ்பவனில் தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உயர்தர மருத்துவ மற்றும் சுகாதார வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர முயற்சி என முதல்வர் இந்த முன்னெடுப்பை குறிப்பிட்டிருப்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநில சட்டசபையில் மாநில ஜிஎஸ்டி திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • மாநில சட்டமன்றத்தில் செப்டம்பர் 13 2023 அன்று குஜராத் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதாவானது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது அம்மாநில நிதியமைச்சர் கனுபாய் தேசாய் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.
  • இணையதள விளையாட்டுகளை(online gaming)  ஒழுங்குபடுத்துவதற்கும், இளைஞர்களுக்கு இதனால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த திருத்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இது குதிரைப் பந்தயம், லாட்டரி மற்றும் கேசினோக்கள் ஆகியவற்றிற்காக வழங்கப்படும் நடவடிக்கைக் கோரிக்கைகளுக்கு 28 சதவீதமானது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் இது தொடர்பான மேல்முறையீடுகளுக்கு மாநில அளவில் ஒரு மேல்முறையீட்டு ஆணையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிட்டத்தட்ட ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் துறை திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

  • நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதில் பிரதமரின் நோக்கத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் ஊக்கமளிக்கும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கரில் கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய ரயில்வே துறை திட்டங்களை இந்திய பிரதமர் மோடி செப்டம்பர் 14 2023 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
  • இந்த திட்டங்களில் சம்பா முதல் ஜம்கா இடையே 3வது ரயில் பாதை, சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம்-I, பென்ட்ரா சாலையிலிருந்து அனுப்பூர் வரையிலான 3வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை NTPC லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் இணைக்கும் திட்டங்களானது இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தக கண்காட்சியின் 4வது பதிப்பை மகாராஷ்டிரா ஆளுநர் தொடங்க உள்ளார்.

  • MSMEகளுக்கான உலகளாவிய வர்த்தக இணைப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தக கண்காட்சியின் 4வது பதிப்பை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ரமேஷ் பைஸ் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த எக்ஸ்போவானது அக்டோபர் 3 முதல் அக்டோபர் 4 வரை  மும்பையில் உள்ள கஃபே பரேட் பகுதியில் நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளதாகும். மேலும் அகில இந்திய தொழில் சங்கம் (AIAI) மற்றும் உலக வர்த்தக மையம் மும்பை இணைந்து சுற்றுலாத்துறையின் முக்கிய உந்துதலாக தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

உலகின் முதல் நாய்-நரி கலப்பினமான “டாக்சிம்” ஆனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • “டாக்சிம்” என்று அழைக்கப்படக்கூடிய உலகின் முதல் நாய்-நரி கலப்பினமானது பிரேசில் நாட்டில் சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 
  • இதனை பற்றிய ஆய்வானது செப்டம்பர் 2023 இல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன்படி டாக்சிம் ஆனது பெரிய, தடிமனான, கூர்மையான காதுகள், கம்பி உரோமம் மற்றும் நீண்ட, மெல்லிய முனகல் ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடிய ஓர் உயிரினம் என்றும் இதனால் பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச ஜனநாயக தினம் 2023

  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது உலகளாவிய ஜனநாயகத்தின் கொள்கைகளை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்வதையும் அதனை மேம்படுத்துவதையும் உலகளவில் அதன் மேன்மையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாளை சர்வதேச ஜனநாயக தினமாக கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது.
  • Empowering the next generation என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும். இந்த நாளானது 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய ஜனநாயகத்திற்கான பிரகடனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய பொறியாளர் தினம் 2023

  • இந்தியாவின் முதல் சிவில் இன்ஜினியர் என்று அழைக்கப்படும் டாக்டர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தேதியானது நாடு முழுவதும் தேசிய பொறியாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • Engineering for a Sustainable Future என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும். 1955 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த நாளை 1968 ஆம் ஆண்டு பொறியாளர்கள் தினமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்தியாவை தவிர இலங்கை மற்றும் தான்சானியாவிலும் இதே நாளில் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!