தமிழக அரசு நல்லாசிரியர் விருது 2021 – கோவையில் 13 ஆசிரியர்கள் தேர்வு!

0
தமிழக அரசு நல்லாசிரியர் விருது 2021 - கோவையில் 13 ஆசிரியர்கள் தேர்வு!
தமிழக அரசு நல்லாசிரியர் விருது 2021 - கோவையில் 13 ஆசிரியர்கள் தேர்வு!
தமிழக அரசு நல்லாசிரியர் விருது 2021 – கோவையில் 13 ஆசிரியர்கள் தேர்வு!

தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.

நல்லாசிரியர் விருது:

இந்தியாவில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக பணிபுரிந்து தன் முயற்சியால் குடியரசு தலைவர் பதவி வரை உயர்ந்தவர். இந்த நாளில் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களை போற்றும் வகையிலும், ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்குவர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விருதுகளை வழங்கும்.

இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு தடை நீக்கம் – பிலிப்பைன்ஸ் அரசு!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இருந்து 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 385 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவையைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெற உள்ளனர். அவர்களின் பெயர் விபரம் முறையே,

  • ஆசிரியர் மை.லிட்வின் – கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி
  • ஆசிரியர் ந.பாலமுருகன் – பொள்ளாச்சி பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி
  • ஆசிரியர் இரா.விஜயராகவன் – கோவை குரும்பப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி
  • ஆசிரியர் து.பிராங்கிளின் – கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
  • ஆசிரியர் வெ.அ.அமானுல்லா – ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • ஆசிரியர் க.இந்திரா – மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • இடைநிலை ஆசிரியர் செ.ரஞ்சிதம் – சூலூர் ஒன்றியம் நாகமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  • ஆசிரியர் ர.சத்யபிரபாதேவி – கோவை ஆறுமுககவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

Tokyo Paralympics பேட்மிண்டன் – வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் மனோஜ் சர்கார்!

  • ஆசிரியர் ப.சுகுணாதேவி – கோவை பிரஸ் காலனி, ஒன்னிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
  • தலைமை ஆசிரியர் பொ.ச.மகாலட்சுமி – தொண்டாமுத்தூர் ஒன்றியம், கல்வீரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  • ஆசிரியர் வெ.கீதா – கோவை ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
  • தலைமை ஆசிரியர் ப.மரகதம் – சூலூர் செஞ்சேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
  • முதல்வர் அ.மரியஜோசப் – ஒண்டிபுதூர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!