TN 12 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை – அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

0
TN 12 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை - அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!
TN 12 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை - அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!
TN 12 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை – அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.03 ஆக உள்ளது. இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 47,934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜிப்மரில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு அனுமதி – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த நிலையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த துணை தேர்வு வரும் ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தற்போது சிறப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.12ம் வகுப்பை தொடர்ந்து 11ம் வகுப்பிற்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அதில் 11ம் வகுப்புகளுக்கு ஜூன் 27-ம் தேதி முதல் துணைத்தேர்வு தொடங்கும். இந்த தேர்வு ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது துணைத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு கால அட்டவணையை dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பார்க்கலாம். மேலும் மாணவர்கள் துணைத்தேர்வுக்கு மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!