10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் பேரலை வீசிக்கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மக்களின் அத்தியாவசிய பணிகள் தவிர பிற அலுவல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல ஒடிசா மாநிலத்திலும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் – அரசுக்கு கோரிக்கை!!
முன்னதாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே மாதம் 18 ஆம் தேதி மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்பட இருந்தது. இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.