
1 -8 வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி ஆண்டு தேர்வுகள்…!! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்
தமிழ்நாட்டில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் தேர்வு அட்டவணை வெளியிட்டது. மேலும், வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்…!! மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுவதாக தகவல்…!!
எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இறுதி தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்திட பரிசீலனை செய்துள்ளதாக” அறிவித்துள்ளார். மேலும், இதற்கு “மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து விரைவில் முடிவுகள் எடுக்க உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.























