
IPL 2025: SRH vs LSG ஐதராபாத் அணியை கதறவிட்ட ஷர்துல் தாகூர்.. T20 வரலாற்றில் நிகோலஸ் பூரன் படைத்த புதிய சாதனை..
IPL தொடரின் 18 வது சீசன் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று (27-03-2025) ஐதராபாத்தில் நடைபெற்ற 7-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. மேலும், டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி “முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது”.
1 -8 வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி ஆண்டு தேர்வுகள்…!! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்
இப்போட்டியில் “ஐதராபாத் அணிக்காக விளையாடிய டிராவிஸ் ஹெட் (47), ஹென்ரிச் கிளாசன் (26), நிதிஷ்குமார் ரெட்டி (32) மற்றும் பேட் கம்மின்ஸ் (18) என அதிகபட்ச ரன்கள் எடுத்தனர். இதை தொடர்ந்து, லக்னோ அணிக்காக விளையாடிய நிகோலஸ் பூரன் (70), மிட்செல் மார்ஷ் (52) மற்றும் ரிஷப் பண்ட் (15) என அதிகபட்ச ரன்கள் குவித்தனர்”. மேலும், “ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்திய நிலையில் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி போட்டியின் ஆட்டநாயகன் விருது வென்றார்”. மேலும், “இப்போட்டியின் மூலம் IPL தொடர்களில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்” என்பது குறிப்பிடத்தக்கது.


























