பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் கட்டணத்தில் தள்ளுபடி தபால் துறையின் புதிய அறிவிப்பு!
இந்திய தபால் துறை, கல்வி துறையில் முன்னேற்றம் காணும் மாணவர்களுக்கு உதவியாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி தொடர்பான ஆவணங்கள், சேர்க்கை விண்ணப்பங்கள் அல்லது தேர்வு சார்ந்த பத்திரங்களை அனுப்பும்போது, ஸ்பீடு போஸ்ட் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, மாணவர்கள் மீது பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் எடுத்த முக்கியமான முடிவாக கருதப்படுகிறது.
பெங்களூரில் உலகளாவிய திருக்குறள் மாநாடு புனித வளனார் பல்கலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த தள்ளுபடி திட்டம் இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் அமலுக்கு வந்துள்ளது. மாணவர்கள் தங்கள் மாணவர் அடையாள அட்டையை (Student ID) காட்டி ஸ்பீடு போஸ்ட் சேவையை தள்ளுபடி விலையில் பயன்படுத்தலாம். கல்வி ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்புவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த சேவை பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் நேரமும் பணமும் மிச்சமாகும் என நம்பப்படுகிறது.


























