பெங்களூரில் உலகளாவிய திருக்குறள் மாநாடு புனித வளனார் பல்கலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பெங்களூரு: தமிழின் தொன்மையான இலக்கியப் பெருமை “திருக்குறள்” குறித்து உலகளாவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பெங்களூரில் நடைபெறவுள்ள உலகளாவிய திருக்குறள் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் புனித வளனார் பல்கலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு மாநாட்டின் ஏற்பாடுகள் மற்றும் தலைப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி தமிழக இளைஞரின் பெரும் சாதனை!
மாநாட்டின் முக்கிய நோக்கமாக, திருக்குறளின் தத்துவங்கள், சமூக நெறிமுறைகள், உலக அமைதி மற்றும் கல்வியில் அதன் பங்குகள் குறித்து விரிவான ஆய்வுகளை உலகம் முழுவதும் பரப்பும் முயற்சி வலியுறுத்தப்பட்டது. இந்த மாநாடு வரவிருக்கும் மாதங்களில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான குழுவினர் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


























