பசுமை மின்சார உற்பத்தியில் உலகில் நான்காவது இடம் இந்தியா
பசுமை மின்சார உற்பத்தி துறையில் இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய நாடாக திகழ்கிறது. சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சியால் இந்தியா இந்த சாதனையை எட்டியுள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 43 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், கார்பன் உமிழ்வை குறைப்பதையும் உறுதிசெய்கிறது.
கிராமப்புறங்களில் ரோபோட்டிக் கல்வி குஜராத்தில் தீவிரம்
மின்சார துறையில் தன்னிறைவை நோக்கி இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் சர்வதேச அளவில் பாராட்டப்படுகின்றன. 2030க்குள் 500 கிகாவாட் பசுமை மின்சார உற்பத்தி இலக்கை அடைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சூரிய மின்நிலையங்கள், காற்றாலை ப்ராஜெக்ட்கள், மற்றும் ஹைட்ரஜன் ஆற்றல் போன்ற திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. பசுமை ஆற்றல் வளர்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.


























