இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி தமிழக இளைஞரின் பெரும் சாதனை!
தமிழகத்தை சேர்ந்த இளம் சதுரங்க வீரர் இளம்பரிதி, இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சிறுவயதிலிருந்தே சதுரங்கத்தில் மெருகூட்டப்பட்ட அவரது திறமை, சர்வதேச அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று வெளிப்பட ஆரம்பித்தது. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தேவையான புள்ளிகளை பெற்று, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளார்.
மூன்றாம் கட்ட மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு அங்கிகாரம் அக்டோபர் 6-ம் தேதியில் தொடக்கம்
இந்த சாதனையால் தமிழகத்துக்கும் இந்திய சதுரங்க உலகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் இளம்பரிதி. மாணவர் நிலையில் இருந்தபடியே உலக அளவில் தன்னை நிரூபித்த அவர், எதிர்காலத்தில் மக்னஸ் கார்ல்சன் போன்ற உலக சாம்பியன்களுடன் போட்டியிடும் இலக்கை நிர்ணயித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதி, நாட்டின் பல இளைஞர்களுக்கும் சதுரங்கத்தில் ஊக்கமாக மாறியுள்ளது.


























