ஒரே சீரியலில் மீண்டும் மாறிய முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

0
ஒரே சீரியலில் மீண்டும் மாறிய முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
ஒரே சீரியலில் மீண்டும் மாறிய முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
ஒரே சீரியலில் மீண்டும் மாறிய முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சீரியல்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்றான “கன்னத்தில் முத்தமிட்டால்” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் மாறி இருக்கிறார். அது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை மாற்றம்:

பல முன்னணி சேனல்களுடன் போட்டி போட ஜீ தமிழ் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அனைத்தும் புதுவிதமான கதையுடன் இருப்பதால் பலர் இந்த சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “கன்னத்தில் முத்தமிட்டால்” சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்த சீரியல் இந்தி சீரியலான ‘துஜ்சே ஹை ராப்தா’வின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் சித்தி கொடுமையை மையமாக வைத்து கதை கொண்டு செல்லப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் ஆதிரா கதாபாத்திரத்தில் நடிகை மனிஷாஜித் நடித்து வந்தார். இவரது அழகான தோற்றம் மற்றும் எதார்த்தமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர் சேனல் குழு சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் சீரியலை விட்டு விலகினார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி கதாபாத்திரமான சுபத்திரா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திவ்யா விஸ்வநாதன் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பிரபலமான நடிகை ராஜேஸ்வரி களமிறங்கி இருக்கிறார்.

கதிரை அடிக்க வந்த அடி ஆட்கள்.. ஜீவாவை உதவிக்கு அழைத்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Follow our Instagram for more Latest Updates

அவர் தற்போது ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும், என்றென்றும் புன்னகை, மந்திர புன்னகை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் தற்போது இரு முக்கிய கதாபாத்திரமும் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!