பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள இளம் நடிகர் – ரசிகர்கள் ஆர்வம்!

0
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள இளம் நடிகர் - ரசிகர்கள் ஆர்வம்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள இளம் நடிகர் - ரசிகர்கள் ஆர்வம்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள இளம் நடிகர் – ரசிகர்கள் ஆர்வம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன் முடிவடைந்த நிலையில் 5வது சீசன் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5யில் இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5 டீசர் மற்றும் ப்ரோமோ வெளியானது. இதுவரை வெளியிடப்பட்ட ப்ரோமோ கான்செப்ட் விட இந்த சீசன் ப்ரோமோ மாறுபட்ட கான்செப்டில் வெளியானது. இதனால் இந்த சீசன் ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

கண்ணனை ஏற்றுக் கொள்ளும் குடும்பத்தினர், அடுத்த வார “பாண்டியன் ஸ்டோர்ஸ்”எபிசோட் – வெளியான தகவல்!!

மேலும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதுவரை டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, நடிகை ஷகிலாவின் மகள் மிளா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நடிகர் அபினய், நடிகை சாந்தினி, நடிகை மைனா நந்தினி, விஜய் டிவி பிரபலம் சுனிதா ஆகியோரின் பெயர்களும் பேசப்பட்டு வருகிறது.

நிச்சயத்திற்கு தயாராகும் பார்வதி, விவாகரத்து பத்திரத்தை பார்த்த சரவணன் – ராஜா ராணி 2 ப்ரோமோ!

மேலும் சீனியர் நடிகைகள் என வடிவுக்கரசி, தீபா ஆகியோரி பெயர்களும் நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயரும் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மைனா படத்தில் வில்லியாகவும் ராட்சசன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்த நடிகை சூசனிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!