
நீங்க மட்டும் கிரெடிட் கார்டு வாங்கவே வாங்கிறாதீங்க..!! ” உங்களுக்கும் அதுக்கும் செட்டே ஆகாது..எதுக்குன்னு தெரியனுமா”..?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் டிஜிட்டல் செயல்முறைகள் அதிக அளவில் வளர்ந்துவிட்டன. தற்போது கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவது முற்றிலும் மாறி, ஜியோ மார்ட், பிக் பஷார், ஸ்மார்ட் பஷார், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மீசோ போன்ற அப்ளிகேஷன் மூலம் வீட்டில் இருந்தபடியே பொருட்களை பர்ச்சேஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், கிரெடிட் கார்டு பயன்பாடு மக்களிடம் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது.
அதாவது, மக்கள் முன்பெல்லாம் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு தயங்கி கொண்டிருந்தனர். ஆனால், தற்போது கிரெடிட் கார்டு இல்லாத இளைஞர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கிரெடிட் கார்டின் பயன்பாடு மக்களுக்கு தேவைப்படுகிறது. மேலும், இந்த கிரேட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரிவார்ட்ஸ், தள்ளுபடி மற்றும் இதர சலுகைகளை வழங்கினாலும் அதே அளவிற்கு அதில் அபாயமும் உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், கிரெடிட் கார்டு யாருக்கெல்லாம் செட் ஆகாது என்பதை கீழே காண்போம்.
1. குறைந்த வருமானம் ஈட்டுபவர் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதில் சிக்கல் உடையவருக்கு, கிரெடிட் கார்டு நிதி சிக்கல் பிரச்சனைகளை உண்டாக்கும் .
2.நிலையான வருமானம் இல்லாதவர்கள், அடிக்கடி EMI பணத்தை செலுத்த தவறலாம் என்பதால் நீங்கள் கிரெடிட் கார்டை தவிர்ப்பது நல்லது.3. பட்ஜெட் கால்குலேஷன் இல்லாமல் பணத்தை செலவு செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால், நீங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்காமல் இருப்பது உங்களுக்கு நன்மை ஆகும்.
மேலும், கவனக்குறைவாக கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் பல்வேறு நிதி நெருக்கடிகள் உண்டாகக்கூடும் என்பதால், தேவை அறிந்து பொறுப்புடன் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























