எந்தெந்த மாவட்டங்களில் நாளை (03.12.2024) மின்தடை தெரியுமா?… மின்வாரியத்துறை அறிவிப்பு..
மனித நாகரிகம் மிகவும் நவீனமாகிவிட்டது, எல்லா இடங்களிலும் மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும், இந்த அத்தியாவசிய மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்க மின் வாரியம் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.இந்நிலையில், இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க குறிப்பிட்ட நேரங்களுக்கு மின்தடை செய்கிறது. இதற்கான, அறிவிப்பை மின் வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது . அந்த வகையில் நாளை (03.12.2024) வேலூர், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கிழவங்கட்டூர்:
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், போச்சிமேடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி சோதனைச் சாவடி, பரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சித்தாலம்புதூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
படிக்கசுவைத்தான்பட்டி:
வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
கூடங்குளம்:
இடிந்தகரை, விஜயபதி, ஆவுடையாள்புரம், இருக்கந்துறை, ஸ்ரீ ரெங்க நாராயண புரம், தந்தல், சங்கனேரி, வைரவி கிணறு, தாமஸ் மண்டபம், சாமையர்புரம்
ஆழ்வார்குறிச்சி:
கருட பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தன்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பாங்குளம், சம்பங்குளம், செல்ல பிள்ளையார்குளம்
வி.கே.புரம்:
காரையார், சேர்வலர், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையாக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டை விளை பட்டி, முதலியார்பட்டி, அய்யனார்குளம், தாதன்பட்டி, கொண்டையன்பட்டி, பையன்பட்டி. பாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.


























