திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்!

0
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார் - பிரபலங்கள் இரங்கல்!
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார் - பிரபலங்கள் இரங்கல்!
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்!

தமிழ்த்திரை உலகின் பிரபல பாடலாசிரியரான கவிஞர் பிறைசூடன் இன்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் பிறைசூடன்:

பிறைசூடன் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சி தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் பெற்றிருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார். பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். 1980களில் இருந்து இளையராஜாவின் பல்வேறு படங்களுக்கு முக்கிய பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி, சோலைபசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா உள்ளிட்ட பாடல்கள் கவிஞர் பிறைசூடனுக்கு அதிக புகழை பெற்று தந்தது.

Twitter வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த 65 வயதாகும் கவிஞர் பிறைசூடன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை காலமானார். இந்த தகவலை கவிஞர் பிறைசூடனின் மகன் மிகுந்த மன வருத்தத்தோடு வெளியிட்டுள்ளார். இவரின் மறைவிற்கு பல பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது ரசிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!