மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

1
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - சூப்பர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - சூப்பர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

நாடு முழுவதும் ஆண்டின் இறுதியில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 11 விழுக்காடு உயர்த்தப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி:

ஆண்டின் இறுதி மாதங்கள் முழுவதும் பண்டிகை காலங்களாக விளங்குகின்றது. இந்த சமயத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 11 விழுக்காடு உயர்த்தப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையால் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

தமிழக அரசு சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு, பணிக்காலம் – கோரிக்கை முன்வைப்பு!

தற்போது பண்டிகை காலம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மாநில அரசு அறிவித்துள்ள இந்த அகவிலைப்படி உயர்வு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அகவிலைப்படி தற்போது 11 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பால் 4 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 3.5 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடுவென அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடாக உயர்த்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடாக உயர்த்தின. சில மாநிலங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படாதது குறித்து பலர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஒடிசா மாநில அரசு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Nasama pona tamilnadu govt mattum yedhum seiyerathu illa. Yella state govt salary increase pandranga evanunga mattum yedhum seiyamatendranunga

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here