அட்ரா சக்க.. முதலீட்டிற்கு ஏற்ற வட்டி வருவாய்..  பெண்களுக்கான மத்திய அரசின் அசத்தல் திட்டம்..

0
????? ????.. ????????????? ???? ????? ???????..  ???????????? ?????? ?????? ??????? ???????..
அட்ரா சக்க.. முதலீட்டிற்கு ஏற்ற வட்டி வருவாய்..  பெண்களுக்கான மத்திய அரசின் அசத்தல் திட்டம்..

அட்ரா சக்க.. முதலீட்டிற்கு ஏற்ற வட்டி வருவாய்..  பெண்களுக்கான மத்திய அரசின் அசத்தல் திட்டம்..

குடிமக்களின் சமூக மற்றும் பொருளாதார நலனுக்காக அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பெண்களுக்காக  மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டத்தை பற்றி விரிவாக கீழே காண்போம்.

அதாவது “மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்”, இது  பெண்களுக்கு சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடியது. இது ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் திட்டமாகும். மேலும், இதில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 வரை தபால் அலுவலகங்கள் மற்றும் வணிக வங்கிகளில் முதலீடு செய்தால் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 7.5 சதவீதம் வட்டி அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான கணக்கை பெண்கள் தங்களுக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகவோ தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் ஒரு பெண் அதிகபட்சத் தொகையான ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு வட்டியாக ரூ.32,044 கிடைக்கும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி மட்டுமே சுமார் ரூ. 15,000 வரை பெறலாம்.

தமிழகத்திற்கு இன்று(டிசம்பர் 7) 7 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு..!! ” எந்தெந்த மாவட்டம் தெரியுமா”..??

 

ஆன்லைனில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) கணக்கு தொடங்கும் வழிமுறைகள்:

* அதிகாரப்பூர்வ இந்தியா போஸ்ட் அல்லது வணிக வங்கியின் இணையதளத்திற்குச் செல்லவும் (பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பிஏபி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் மட்டுமே இந்த திட்டத்தின் கணக்கை திறக்க முடியும். ).

* உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆதார் மற்றும் பான் கார்டை சரிபார்ப்பதற்காக பதிவேற்றவும்.

* தேவையான தகவல்களை அளித்ததும், முதலீட்டுத் தொகையைத் ரூ 1,000 முதல் ரூ 2 லட்சம் வரை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.

* பின்னர் ஆதார், பான் மற்றும் முகவரிச் சான்று போன்ற தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து நெட் பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தவும்.

* கணக்கு அகிட்டிவேட் செய்யப்பட்டவுடன் உங்கள் கணக்கை மற்றும் வட்டி விபரங்களை ஆன்லைன் மூலம்  கண்காணித்து கொள்ள முடியும். மேலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!