மகளிர் T20 உலகக்கோப்பை: போராடி வீழ்ந்த இந்தியா.. அரையிறுதிக்கு தகுதி பெறுமா??

0

2024 மகளிர் T20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 151/8 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய வீராங்கனைகள் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 20 ஓவர் முடிவில் 142/9 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

இதன்மூலம், 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதை பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியே தீர்மானிக்கும். அதாவது இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நேருக்கு நேர் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளதால் எளிதாக அரையிறுதிக்கு செல்லும். மாறாக நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!