விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா?? ஈபிஎஸ் சொன்ன பதில்.. விவரம் உள்ளே!!
மது விலக்கு கோரிக்கையை முன்வைத்து வரும் அக்டோபர் 2ம் தேதி திருமாவளவன் தலைமையிலான விசிகவின் மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக கலந்துகொள்ளுமா? என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, விசிக தரப்பில் மாநாட்டுக்கு முறையாக அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன், ஒத்த கருத்துடைய கட்சிகள் வந்தால் கூட்டணியில் இணைத்துக்கொள்வோம் என்றும் அவர் சூசகமாக கூறியுள்ளார்.


























