10 ஆண்டுகள் ஆட்சிக்கு பின் ஓய்வு பெறப்போகும் பிரதமர் மோடி…!! இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்…?

0
10 ???????? ????????? ???? ????? ??????????? ??????? ????...!! ??????????? ?????? ??????? ????...?
10 ஆண்டுகள் ஆட்சிக்கு பின் ஓய்வு பெறப்போகும் பிரதமர் மோடி...!! இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்...?

10 ஆண்டுகள் ஆட்சிக்கு பின் ஓய்வு பெறப்போகும் பிரதமர் மோடி…!! இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்…?

இந்திய பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றார். இதையடுத்து, அவர் அங்கிருந்த டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு, அதன்பின் மாதவ் நேத்ராலயா கண் மருத்துவ நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில், தற்போது சிவசேனா (யுபிடி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம்…!! வரும் கல்வியாண்டில் இருந்து அறிமுகமாகும் என தகவல் 

அதாவது, பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக  ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றதில்லை என்றும், அவர் தனது ஓய்வு விண்ணப்பத்தை அளிக்கவே அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ்  அமைப்பும், பாஜக வும் புதிய தலைவரை பணியமர்த்துவதையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, நாட்டின் அடுத்த பிரதமர் தேர்வு செய்வது குறித்த ஆலோசனை நடத்தவே பிரதமர் மோடி அங்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!