சர்ச்சையை உண்டாகும் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம்.. அரசின் எதிர்ப்புக்கு என்ன காரணம்?? விவரம் உள்ளே!!
கடந்த 2022-ம் ஆண்டு பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ரூ.27,360 கோடி செலவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் 60% மத்திய அரசின் பங்களிப்பும், 40% மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். இதன் மூலம் சுமார் 14,500 பள்ளிகளில் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இத்திட்டத்திற்கான பலனைப் பெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தேர்வு செய்யப்படும் பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும். ஆனால் இந்த திட்டத்தில் இணையத் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதன் காரணமாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது. சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு கூறி வருகிறது. கொள்கைகளை விட்டுக் கொடுத்து நிதி பெறத் தேவையில்லை என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























