VITEEE 2021 நுழைவுத்தேர்வு தள்ளிவைப்பு – ஜூன் 18 இல் நடைபெறும்!!

0
VITEEE 2021 நுழைவுத்தேர்வு தள்ளிவைப்பு - ஜூன் 18 இல் நடைபெறும்!!
VITEEE 2021 நுழைவுத்தேர்வு தள்ளிவைப்பு - ஜூன் 18 இல் நடைபெறும்!!
VITEEE 2021 நுழைவுத்தேர்வு தள்ளிவைப்பு – ஜூன் 18 இல் நடைபெறும்!!

வேலூர் தொழில் கல்வி நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு (VITEEE 2021) நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அதனை தள்ளி வைத்து ஜூன் 18 முதல் ஜூன் 26 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VITEEE 2021 தேர்வு:

வேலூர் தொழில் கல்வி நிறுவனம் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ‘VITEEE 2021’க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேலூர், சென்னை, ஆந்திரா, மற்றும் போபால் போன்ற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்க ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. நடப்புகல்வி ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் விருப்பமுள்ள மாணவர்கள் மார்ச் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அஞ்சல் வழியில் ரயில்வே பொறியியல் படிப்பு – IPWE அறிவிப்பு!!

JEE மற்றும் SAT தேர்வுகளுக்கான கூட்டுத் தேர்வாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் இரண்டு அல்லது மூன்றாம் வாரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 18 முதல் ஜூன் 26 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் vit.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!