IND vs AUS 1st Test 2024: 491 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்த விராட் கோலி.. முழு விவரம் உள்ளே!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து டிக்கலர் செய்தது.
இதற்கிடையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இவர் 143 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 100* ரன்கள் விளாசினார். இது அவரது 81வது சர்வதேச சதம் என்பது சிறப்புக்குரியது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் கிட்டத்தட்ட 491 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்து உள்ளதால் ரசிகர்கள் ‘ONCE UPON A TIME THERE LIVED A GHOST’ என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு அவரை கொண்டாடி வருகின்றனர்.


























