
விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…!! மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அளித்த சூப்பர் நியூஸ் ..!
விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாசி பெருந்திருவிழா இன்று (25.02.2025) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, “மேல்மலையனூர் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக” அம்மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். மேலும், இந்த மேல்மலையனூர் திருத்தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த “உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வேலை நாளாக செயல்படும்” என்றும் அறிவித்துள்ளார்.

























