சமையல் வேலைக்கு செல்லும் மீனா.. உதவி செய்யும் ரவி – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!

0
சமையல் வேலைக்கு செல்லும் மீனா.. உதவி செய்யும் ரவி -
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், மீனா தன்னுடைய சுய கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்கிறார். அவருக்கு துணையாக ரவி கை கொடுக்க அடுத்து குடும்பத்தில் நடக்க போவது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில், மீனா வரதட்சணை வாங்கி கொண்டு வரவில்லை என்பதால் விஜயா அவரை அசிங்கப்படுத்துகிறார். உடனே மீனா இனிமேல் என் கழுத்தில் தங்க தாலி இருக்க வேண்டும் என்றால் அது என் புருஷன் காசில் தான் என சொல்கிறார். மேலும் மீனா தன்னுடைய கணவருக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என நினைத்து வேலைக்கு போக முடிவு செய்கிறார்.

ஆனால் அவருக்கு வேலை கிடைக்காமல் இருக்க, தனக்கு தெரிந்த சமையல் வேலையை வைத்து முன்னேற நினைக்கிறார். எங்கே வேலைக்கு போவது என குழப்பத்தில் இருக்கும் மீனாவிற்கு ரவி துணையாக இருக்கிறார். ரவி தன்னுடைய ஹோட்டலில் மீனாவிற்கு சமையல் வேலை கொடுக்கிறார். அதனால் வீட்டில் வேலை செய்ய முடியாமல் மீனா கஷ்டப்படுகிறார். ஆனால் விஜயா அவரை  வீட்டு வேலைகளை செய்ய சொல்ல, அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!