விஜய் டிவியின் முக்கிய சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் பெரிய மாற்றங்கள் – இதுக்கு மேல தாங்காது பா!!

0
விஜய் டிவியின் முக்கிய சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் பெரிய மாற்றங்கள் - இதுக்கு மேல தாங்காது பா!!
விஜய் டிவியின் முக்கிய சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் பெரிய மாற்றங்கள் - இதுக்கு மேல தாங்காது பா!!
விஜய் டிவியின் முக்கிய சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் பெரிய மாற்றங்கள் – இதுக்கு மேல தாங்காது பா!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலின் கதாநாயகி ரியா சீரியலை விட்டு விலகிய நிலையில், தற்போது மற்றொரு பெரிய மாற்றம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் மாற்றம்

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக விஜய் டிவி சீரியல்கள் இருக்கின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “ராஜா ராணி 2”. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் சித்து நடித்து வருகிறார். மேலும் தொடக்கத்தில் கதாநாயகியாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். அதன் பின் அவர் சீரியலை விட்டு விலகிய நிலையில், இரண்டாவதாக நடிகை ரியா கதாநாயகியாக அறிமுகமானார்.

இனியாவை படிக்க சொல்லி மிரட்டும் ராதிகா, நிலாவை கொஞ்சும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்நிலையில் ரியா கடந்த வாரம் சந்தியா கதாபாத்திரத்தில் இனி தொடர்ந்து நான் நடிக்க போவதில்லை என வீடியோ வெளியிட்டார். அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ஆஷா கவுடா களமிறங்கி இருக்கிறார். இப்படி தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் சீரியலில், மற்றொரு பெரிய மாற்றம் ஒன்று வந்துள்ளது. அதாவது இந்த சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய இயக்குனராக ரமேஷ் பாரதி என்பவர் வந்திருக்கிறார். அவர் வந்த பின் கதையில் எப்படி மாற்றம் இருக்க போகிறது என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!