சமையல் போட்டியில் கலந்து கொள்ள சொல்லி கெஞ்சும் முல்லை, பிடிவாதம் பிடிக்கும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
சமையல் போட்டியில் கலந்து கொள்ள சொல்லி கெஞ்சும் முல்லை, பிடிவாதம் பிடிக்கும் கதிர் - இன்றைய
சமையல் போட்டியில் கலந்து கொள்ள சொல்லி கெஞ்சும் முல்லை, பிடிவாதம் பிடிக்கும் கதிர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
சமையல் போட்டியில் கலந்து கொள்ள சொல்லி கெஞ்சும் முல்லை, பிடிவாதம் பிடிக்கும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிரிடம் சமையல் போட்டிக்கு போகலாம் என கெஞ்சி கேட்கிறார். ஆனால் கதிர் வேண்டாம் என சொல்ல, முல்லை மிகவும் கெஞ்சி கேட்க, கதிர் பத்திரப்பதிவு இருப்பதாக சொல்கிறார். அதற்குள் வந்துவிடலாம் என முல்லை சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிரிடம் சமையல் போட்டிக்கு போக வேண்டும் என சொல்கிறார். ஆனால் கதிர் என்னால் முடியாது என சொல்ல, உடனே முல்லை ப்ளீஸ் என கேட்கிறார். ஆனால் கதிர் எனக்கு அங்கே எல்லாம் வந்து பேச முடியாது என சொல்கிறார். இந்த ஊரில் அனைவரும் உங்களை வீரன் என சொல்கிறார்கள் ஆனால் நீங்க என்ன இப்படி இருக்கீங்க என முல்லை கேட்கிறார். அதெல்லாம் இருக்கட்டும் ஆனால் எனக்கு அங்கே வந்து ஒன்றும் பண்ண தெரியாது என சொல்கிறார் கதிர். நாம போய் கலந்து கொள்வோம், முடியவில்லை என்றால் வந்துவிடுவோம் என சொல்கிறார். கதிர் நாளை பத்திரப்பதிவு இருப்பதாக சொல்ல, அதற்குள் வந்துவிடலாம் என முல்லை சொல்கிறார். கதிர் அப்போதும் முடியாது என சொல்ல, ஆனால் முல்லை அதெல்லாம் இல்லை என சொல்கிறார்.

மறுபக்கம் அனைவரும் சாப்பிட அமர கண்ணன் எதோ முக்கியமான கதை சொல்வதாக சொல்கிறார். அப்போது மூர்த்தி போன் பேசிக் கொண்டே இருக்க, கண்ணன் யாரும் சாப்பிடாதீங்க நான் சொல்வதை கேளுங்கள் என சொல்கிறார். எல்லாரும் சொல்ல சொல்ல, கண்ணன் அன்னைக்கு நேர்மையை பற்றி சொன்னீங்களே, இன்னைக்கும் அந்த லேடி லஞ்சம் வாங்க பார்த்தது. ஆனால் நான் அண்ணன் சொல்வது போல சொல்லி அந்த லேடியை பணம் வாங்க விடாமல் செய்துவிட்டேன். உடனே அந்த பாட்டியிடம் பணம் வாங்க சொன்னாங்க, நானும் போனேன் என சொல்ல, பாட்டி பணத்தை கொடுத்துவிட்டார்கள் என சொல்கிறார்.

உடனே கண்ணன் அந்த லேடி என்னை பாராட்டிவிட்டார் என சொல்கிறார். பின் மூர்த்தி இதான் நேர்மைக்கு கிடைத்த பரிசு என சொல்கிறார். அனைவரும் கண்ணனை பாராட்டுகின்றனர். ஆனால் அந்த பணத்தை காணவில்லை என தேட, ஜீவா பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். இது எப்படி உன்னிடம் வந்தது என கண்ணன் கேட்க, வண்டியில் பணம் இருந்ததாக ஜீவா சொல்கிறார். பின் அனைவரும் சேர்ந்து சாப்பிடுகின்றனர். மறுபக்கம் முல்லை ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைத்துவிட்டதாக சொல்ல, கதிர் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் முல்லை அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்ல, கதிர் நன்றாக யோசித்துக் கொள் என சொல்கிறார். கதிர் போக வேண்டுமா என கேட்க, முல்லை எனக்காக வாங்க என சொல்கிறார்.

பாக்கியா வீட்டிற்கு எதிரே குடி வரும் கோபி, வருத்தப்பட்ட செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

முல்லை கதிரிடம் நீங்க பெரிய வீரன் என நினைத்தேன் ஆனால் நீங்க இப்படி இருக்கீங்க என கேட்கிறார். கதிர் அங்கே வந்து ஏன் நான் பேசவில்லை என கேட்க கூடாது என சொல்ல, முல்லை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். கதிர் அங்கே வந்து எனக்கு பேச தெரியாது என சொல்ல, முல்லை ஒரு ஹோட்டல் நடத்துறீங்க இதற்கெல்லாம் ஏன் பயப்படுறீங்க என கேட்கிறார். பின் முல்லையின் அப்பா வர, முல்லை இதை பற்றி சொல்ல வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கதிர் நான் சொல்வேன் என சொல்ல, முல்லை அப்பா பை எடுத்துக் கொண்டு எங்கே போறீங்க என கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!