பாக்கியா வீட்டிற்கு எதிரே குடி வரும் கோபி, வருத்தப்பட்ட செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியா வீட்டிற்கு எதிரே குடி வரும் கோபி, வருத்தப்பட்ட செழியன் - இன்றைய
பாக்கியா வீட்டிற்கு எதிரே குடி வரும் கோபி, வருத்தப்பட்ட செழியன் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியா வீட்டிற்கு எதிரே குடி வரும் கோபி, வருத்தப்பட்ட செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியா வீட்டிற்கு எதிரே குடி வர அதை நினைத்து பாக்கியா வருத்தப்படுகிறார். மறுபக்கம் செழியன் கோபியை பார்த்து அதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் எழில் விஷயத்தை கேள்விப்பட்டு கோபப்படுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டிற்கு எதிர் வீட்டில் கோபி மயூரா ராதிகா உடன் குடி வருகிறார். பாக்கியா அதை நினைத்து கோவமாக அமர்ந்திருக்கிறார். அப்போது செல்வி வர ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது பாக்கியா ஒன்றுமில்லை என சொல்ல, செல்வி நம்ம எதிர் வீட்டிற்கு ஆட்கள் வந்திருப்பதாக சொல்கிறார். யார் வந்தால் என்ன என பாக்கியா கேட்க, நான் யார் வந்திருக்கிறார் என விசாரித்தேன், எதோ புதிதாக கல்யாணம் முடிந்தவர்கள் வந்திருக்கிறார்களாம், ஆனால் அவர்கள் குழந்தையுடன் வந்திருக்கிறார்களாம் என அதிர்ச்சியாக சொல்கிறார்.

யார் வந்தால் நமக்கு என்ன என பாக்கியா கேட்க, உடனே செல்வி உனக்கு யார் வந்திருக்கிறார் என தெரியுமா என கேட்கிறார். ஆமாம் இனியாவின் அப்பாவும் ராதிகாவும் வந்திருப்பதாக சொல்ல, நீ பார்த்தியா என செல்வி கேட்கிறார். காலையில் கோலம் போடும் போது பார்த்தேன் என பாக்கியா சொல்கிறார். உடனே செல்வி இது என்ன அநியாயமாக இருக்கிறது. உடனே வந்து கேளு அக்கா, கல்யாணம் முடிந்துவிட்டது இப்படியே விட்டுவிடலாம் என நினைத்தால், எதிர் வீட்டில் வருவது எல்லாம் அநியாயமாக இருப்பதாக செல்வி சொல்கிறார். அவங்க வேண்டும் என்றே தெரிந்து தான் வந்திருக்கிறார்கள். நம்மளால் எதுவும் செய்ய முடியாது என பாக்கியா சொல்கிறார்.

பின் கோபி வண்டியில் பொருள்கள் ஏற்றி வந்தவருக்கு பணம் கொடுக்கிறார். அப்போது வண்டிக்காரர் அதிகமாக பணம் கேட்க, கோபி அவரிடம் சத்தம் போடுகிறார். அப்போது செழியன் அந்த பக்கமாக ஜாகிங் சென்றுவிட்டு வருகிறார். கோபி செழியனை பார்த்து எப்படி இருக்கிறாய் என கேட்க, செழியன் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது தான் என்னுடைய புது வீடு என கோபி சொல்ல, செழியன் எதுவும் பேசாமல் இருக்கிறார். இது தெரிந்த தெருவாக இருக்கிறது. அதனால் தான் இங்கே வந்தேன் என சொல்கிறார். செழியனிடம் எப்படி இருக்கிறாய் நான் போன் செய்தேன் ஏன் எடுக்கவில்லை என கேட்கிறார். அப்போது மயூரா வர செழியன் எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார்.

வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை? – முழு விவரம் இதோ!

செழியன் வீட்டிற்கு வந்து பால்கனி வழியாக கோபியை பார்க்கிறார். ஜெனி செழியனிடம் என்ன ஆச்சு என கேட்க, செழியன் அப்பா எதிர் வீட்டில் குடி வந்துள்ளதாக சொல்கிறார். ஜெனியும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் கோபி பாக்கியா வீட்டை பார்க்க, ராதிகா வந்து என்ன அங்கையே பாக்குறீங்க உங்களுக்கு உங்க வீட்டு நினைப்பு வருகிறதா என கேட்க, இல்லை இது தான் நம்ம வீடு என கோபி கேட்கிறார். நாம சந்தோசமாக இருப்பதை காட்ட தான் இங்கே வந்து இருக்கோம் என கோபி ராதிகாவை சமாதானம் செய்கிறார். பின் அனைவரும் சாப்பிட அமர, எழில் இனியா பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் எதுவும் பேசாமல் இருக்க திடீரென அழ தொடங்கிவிடுகிறார். அப்போது பாக்கியா என்ன ஆச்சு என கேட்க, செழியன் உண்மையை சொல்கிறார். உடனே எழில் அடுப்படிக்கு சென்று கத்தியை எடுக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!