சுவாரசியத்துடன் புதுமையாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7.. இரண்டாவது வீட்டிற்கு சென்ற 6 பேர் – ப்ரோமோ ரிலீஸ்!

0
சுவாரசியத்துடன் புதுமையாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7.. இரண்டாவது வீட்டிற்கு சென்ற 6 பேர் - ப்ரோமோ ரிலீஸ்!
சுவாரசியத்துடன் புதுமையாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7.. இரண்டாவது வீட்டிற்கு சென்ற 6 பேர் - ப்ரோமோ ரிலீஸ்!

சுவாரசியத்துடன் புதுமையாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7.. இரண்டாவது வீட்டிற்கு சென்ற 6 பேர் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில், முதல் வாரத்தில் முதல் நாள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நாமினேட் செய்யப்பட்டவர்கள் இரண்டாவது வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர்.

பிக்பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. முதல் நாளில் 17 போட்டியாளர்களை நடிகர் கமல் அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அதில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, பிரதீப் ஆண்டனி, வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார்,நிக்சன், ஐஷூ, விஷ்ணுவிஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, சரவண விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லத்துரை, விஜய் ஆகியோர் உள்ளே இருக்கின்றனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் சட்டென்று குறைந்த தங்கத்தின் விலை – உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!

அவர்களில் முதல் நாளே வித்தியாசமான டாஸ்க் வைத்து விஜய் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சீசனில் இரண்டு வீடு இருக்கும் என ஏற்கனவே கமல் ப்ரோமோவில் தெரிவித்துள்ளார். அதன் படி முதல் நாள் நாமினேஷன் முடிந்துள்ளது. அதில் தலைவர் விஜய்யை குறைவாக கவர்ந்ததால் ஐஷு, நிக்சன், பவா செல்லத்துரை, அனன்யா, வினுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக இரண்டாவது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் இந்த வீட்டிற்கு வந்த பின் தான் பிக்பாஸ் பேசுவார். அது மட்டுமில்லாமல் அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் இந்த வீட்டை விட்டு வெளியே வர கூடாது என பிக்பாஸ் அறிவிக்க அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!