தமிழகத்தில் ஒரே நாளில் சட்டென்று குறைந்த தங்கத்தின் விலை – உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பங்குசந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை திடீரென குறைவதும், அதிகரிப்பதுமாய் இருந்து வருகிறது. மேலும், பொதுவாகவே விசேஷ தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர வாய்ப்பு இருக்கிறது. அதனையடுத்து, நேற்று சென்னையில் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5230-க்கும், சவரனுக்கு ரூ. 46, 640க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Join Our WhatsApp Group” for Latest Updates
மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5360 க்கும், சவரனுக்கு ரூ. 42,850 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ.5826 க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.46, 608க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தங்கத்தை காட்டிலும் அதி வேகத்தில் உயரும் காய்கறிகளின் விலை – இன்றைய பட்டியல் வெளியீடு!
இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 5356க்கும், சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ.42, 848க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை குறைய தொடங்கி உள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.