ராதிகாவை விரட்டி விட்ட கோபி.. மோசமாகும் நிலைமை – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் கோபி. கோபி முழுவதுமாக அம்மா பேச்சை கேட்க தொடங்க ராதிகா வாழ்க்கை கேள்வி குறியாக மாறுகிறது
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா பல பிரச்சனைகளுக்கு நடுவே கோபி உடன் வாழ வேண்டும் என நினைத்து பாக்கியா வீட்டில் தங்கிவிடுகிறார். அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வர ஈஸ்வரி ராதிகாவுக்கு இடையே சண்டை வருகிறது. அப்போது ராதிகா கோபியை ஆதரவிற்கு கூப்பிட, கோபி ஈஸ்வரிக்கு ஆதரவாக பேசுகிறார். உன்னால் தான் வீட்டில் இவ்வளவு சண்டை நீ இந்த வீட்டை விட்டு போ என் குடும்பம் நிம்மதியாக இருக்கட்டும் என கோபி சொல்கிறார்.
உடனே ராதிகா வீட்டை விட்டு வெளியே செல்கிறார். ராதிகா சென்ற கவலையில் கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வராமல் இருக்கிறார். உடனே ஈஸ்வரி செழியனுடன் சேர்ந்து கோபியை தேட செல்கிறார். கோபி ஒரு இடத்தில் விழுந்து கிடக்க அவரை தூக்கிக் கொண்டு காரில் வருகிறார். கோபியை இப்படியே விட முடியாது என ராதிகா கோபிக்கு போன் செய்ய அதை ஈஸ்வரி எடுத்து பேசுகிறார். ஈஸ்வரி இனிமேல் என் மகன் உன்னுடன் வாழ மாட்டான் என்று சொல்ல ராதிகா தலையில் இடி விழுகிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
Join Our WhatsApp
Group” for Latest Updates