நிலாவை காரணமாக வைத்து எழில் அமிர்தாவை பிரிக்கும் கணேஷ் – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்ததை கணேஷ் அம்மா அப்பா மறைத்து விடுகின்றனர். ஆனால் நிலாவின் போட்டோவை பார்த்து கணேஷ் உண்மையை தெரிந்து கொள்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் மீண்டும் உயிரோடு வந்து விடுகிறார். அவரை பார்த்து கணேஷ் அம்மா அப்பா சந்தோஷப்பட்டாலும், ஒரு பக்கம் பயப்படுகின்றனர். இந்நிலையில் கணேஷ் அமிர்தா எங்கே என கேட்க, அவள் அம்மா வீட்டில் இருப்பதாக கணேஷ் அம்மா அப்பா பொய் சொல்கின்றனர். இந்நிலையில் கணேஷ் அப்பாவின் போனில் நிலா உடன் இருக்கும் போட்டோவை பார்த்து விடுகிறார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல் – மத்திய அரசு திட்டம்!
அது யார் என கேட்க, உடனே அமிர்தா உடன் நிலா இருக்கும் போட்டோவையும் பார்த்து விடுகிறார். அதனால் வேற வழி இல்லாமல் இது உன்னுடைய குழந்தை என கணேஷ் அம்மா சொல்கிறார். இதனால் கணேஷ் சந்தோஷப்பட்டாலும், எப்படி உண்மையை சொல்வது என தெரியாமல் அம்மாவும் அப்பாவும் தவிக்கின்றனர். இந்நிலையில் இனி வரும் எபிசோடில் கணேஷிற்கு உண்மை எல்லாம் தெரிய வர அவர் எழில் அமிர்தாவை பிரிப்பாரா என்பது தெரியும்.