அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் விஜய்…..மாநாடு எப்போது தெரியுமா?
செப்டம்பர் 22ம் தேதி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவர் சினிமாவை விட்டு விளங்குவதாகவும் அரசியலில் இணைய போவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் GOAT திரைப்படம் அவரது இறுதி படம் என கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசியலில் முழுமையாக தீவிரம் காட்டி வருகிறார்.
பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் எப்படி செக் பண்ணனும் தெரியுமா? உடனே கிளிக் பண்ணுங்க!
தற்போது அவர் 2026 ம் ஆண்டு தேர்தலை நோக்கி பயணித்து கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். தொடர்ச்சியாக, கட்சி கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணிகளில், கட்சியின் தலைவரான அவர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி அருகே செப்டம்பர் 22ம் தேதி மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

























