தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசு அலுவலகங்களில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி, வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று (அக்டோபர் 23) தீடிரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மக்களே..இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை..அரசு அறிவிப்பு !! “வந்தாச்சு புதிய திட்டம்”..!!
இந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நடத்தப்பட்டிருக்கும் இந்தச் சோதனை பரவலாக கவனம் பெற்றுள்ளது.


























