கால்நடை மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? முதல்வர் விஜய் எதிர்ப்பு

0

கால்நடை மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? முதல்வர் விஜய் எதிர்ப்பு!

கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது மாநில அரசுகளே நிர்ணயிக்கும் சேர்க்கை முறையிலோ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

என்ன பிரச்சினை?

2026-27 கல்வியாண்டு முதல் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு அல்லது மாற்று ஏற்பாடாக NEET UG தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும், மாநிலங்களின் கல்வி மற்றும் சமூக-பொருளாதார சூழலுக்கு ஏற்ப சேர்க்கை விதிகளை நிர்ணயிக்க மாநில அரசுகளுக்கு உரிமை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தொடர வேண்டும் என்பதே தமிழகத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!