PF பென்ஷன் வாங்குறவங்களுக்கு செம நியூஸ்!
மாதம் ரூ.12,500 வருமா?
முழு விவரம்
EPS-95 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய மாற்றம் வர வாய்ப்புள்ளது. தற்போதுள்ள EPF wage ceiling ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தால், EPS ஓய்வூதியக் கணக்கீட்டிலும் மாற்றம் ஏற்படலாம்.
ரூ.12,500 பென்ஷன் எப்படி?
தற்போதைய ரூ.15,000 wage ceiling அடிப்படையில் EPS ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. ceiling ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், குறிப்பிட்ட பங்களிப்பு மற்றும் சேவை காலத்தைப் பொறுத்து மாத ஓய்வூதியம் ரூ.12,500 வரை செல்லும் வாய்ப்பு இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
இன்னும் இறுதி முடிவு இல்லை
முக்கியமாக, அனைத்து PF pensioners-க்கும் உடனடியாக ரூ.12,500 கிடைக்கும் என்று அர்த்தமில்லை. Wage ceiling உயர்வு மற்றும் அதன் அமலாக்கம் தொடர்பாக இறுதி அரசு முடிவு மற்றும் விதிமுறைகள் வெளியாக வேண்டும்.
இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், எதிர்காலத்தில் EPS மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.



























