UPSC மருத்துவ சேவைகளுக்கான நேர்காணல் செப்.13 தொடக்கம் – அறிவிப்பு வெளியீடு!

0
UPSC மருத்துவ சேவைகளுக்கான நேர்காணல் செப்.13 தொடக்கம் - அறிவிப்பு வெளியீடு!
UPSC மருத்துவ சேவைகளுக்கான நேர்காணல் செப்.13 தொடக்கம் - அறிவிப்பு வெளியீடு!
UPSC மருத்துவ சேவைகளுக்கான நேர்காணல் செப்.13 தொடக்கம் – அறிவிப்பு வெளியீடு!

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான நேர்காணல் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருப்பதாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நேர்காணல்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான நேர்காணல் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வாளர்கள் https://www.upsc.gov.in மற்றும் https://www.upsconline.in. என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக தேர்விற்கான தேதி மற்றும் நேரத்தினை அறிந்துகொள்ளலாம். மேலும், நேர்காணலுக்கான மின்-அழைப்பு கடிதத்தினையும் இந்த இணைய பக்கத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NAPS – Power Grid நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.17,500/- ஊதியம் !

மேலும், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு பயணச் செலவுகள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்வாளர்கள் இரண்டாவது/ஸ்லீப்பர் வகுப்பு ரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், https://upsc.gov.in/forms-downloads என்கிற இணைய பக்கத்தின் மூலமாக நேர்காணலில் கலந்துகொள்ள இருக்கும் தேர்வாளர்கள் பயண உதவித்தொகை குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!