நடப்பு நிகழ்வுகள் – 31 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 31 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 31 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 31 ஆகஸ்ட் 2023

 

தேசிய செய்திகள்

சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டிற்காக இந்தியாவும் நியூசிலாந்தும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  • இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்துத்துறையினை மேம்படுத்துவதையும் அதன் கூட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு இந்தியாவும் நியூசிலாந்தும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்திட்டுள்ளன. 
  • இது புதிய வழித்தடங்களின் திட்டமிடல், போக்குவரத்து உரிமைகள் மற்றும் திறன் உரிமை மற்றும் குறியீடு பகிர்வு சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். புது டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால் இந்தியா சார்பினை முன்னிலைப்படுத்தினார்.

கப்பல் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பில் இணைந்து செயல்படுவதற்காக இந்தியாவும் கென்யாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • இரு நாடுகளின் கப்பல் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பில் அதன் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் கோவா கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் கென்யா கப்பல் கட்டும் நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 29 அன்று மேற்கொண்டுள்ளது.
  • இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் ஆழமான ஒத்துழைப்பின் அவசியம் கருதியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என கென்யா பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

UNDP மற்றும் NITI ஆயோக் ஆகியவை விரைவான கண்காணிப்பு SDG மேலாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  • நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய விரைவான முன்னேற்றத்திற்கான பரஸ்பர அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதையும் அதனை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு UNDP இந்தியா மற்றும் NITI ஆயோக் அமைப்புகளானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஆகஸ்ட் 29 அன்று கையெழுத்திட்டுள்ளன. 
  • SDG தரவு சார்ந்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பின் கட்டமைப்பை முறைப்படுத்துதல் மற்றும் உள்ளூர்மயமாக்கல், அவற்றின் விரைவான கண்காணிப்பு ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது 5 ஆண்டு வளர்ச்சிகளை உள்ளடக்கிய தொகுப்பாக அமைகிறது.

சர்வதேச செய்திகள்

பசுமை ஆற்றல் மேம்பாட்டிற்காக தென் கொரியாவும் ஓமன் நாடும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  • சுற்றுச்சூழல் மற்றும் நிலையான நட்பு நடைமுறைகளின் துறையில் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் பசுமை மாற்ற முயற்சிகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தவும் ஓமன் மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது தென் கொரியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஓமனின் எரிசக்தி மற்றும் கனிமங்கள் அமைச்சகம் ஆகியவைகளுக்கு இடையே இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • பசுமை மாற்றக் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்களை விரைவுபடுத்த உலகளாவிய அளவில் கூட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது, தொழில்நுட்பங்கள் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பது, தொழில்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே விரிவான ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலேசியாவின் சோலார் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஒரு முன்னணி உலகளாவிய புகழ்பெற்ற மற்றும் முன்னணி PV மற்றும் அதிதீர் ஆற்றல் மொத்த தீர்வுகள் வழங்குனரான டிரினா சோலார் நிறுவனத்திடம் மலேசிய(GSPARX ) அரசாங்கமானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.
  • மலேசியாவில் ஒரு வலுவான மற்றும் நிலையான எரிசக்தித் துறையை வளர்ப்பதையும் அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

‘க்ருஹ லட்சுமி’ என்ற திட்டமானது கர்நாடகாவில் தொடங்கியுள்ளது.

  • மாநில தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கர்நாடக மாநில அரசாங்கமானது ஆகஸ்ட் 30 அன்று மைசூருவில் ‘கிருஹ லட்சுமி'(மகளிர் நிதி உதவித் திட்டம்) என்ற முக்கிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மைசூரில் சுமார் 1.1 கோடி பெண் குடும்பத் தலைவர்களுக்கு தலா ₹2,000 ஆனது மாதந்தோறும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநில அரசாங்கமானது நடப்பு நிதியாண்டில் ‘க்ருஹ லட்சுமி’ திட்டத்திற்காக கிட்டத்தட்ட ₹17,500 கோடியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டெல்லியில் ரத்தசோகை செல் நோயை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான பயிற்சியை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

  • ரத்தசோகை செல் நோயை ஒழிப்பது குறித்த முக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தேசிய தலைநகரமான புதுடெல்லியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகஸ்ட் 29 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
  • தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு இயக்கம் மற்றும் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் மத்திய அரசாங்கமானது 2047 ஆம் ஆண்டிற்குள் இந்நோயை ஒழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

71வது மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியானது காஷ்மீரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • 71வது மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியானது இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் காஷ்மீரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உலக அழகி அமைப்பு ஆனது ஆகஸ்ட் 29 அன்று அறிவித்துள்ளது.
  • கிட்டத்தட்ட இந்த போட்டியில் 140 நாடுகள் பங்கேற்க உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாத சூழ்நிலையில், கடந்த மே மாதம் இங்கு நடைபெற்ற G20 மாநாட்டிற்கு அடுத்தபடியாக இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாகர் பரிக்ரமா திட்டத்தின் VIII ஆம் கட்டமானது தொடங்க திட்டம். 

  • தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மாநில அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இணைந்து சாகர் பரிக்ரமா திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.
  • இந்த முன்னெடுப்பானது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் நான்கு கடலோர மாவட்டங்களை உள்ளடக்கியதாக சாகர் பரிக்ரமாவின் இந்த முன்னெடுப்பானது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

செஞ்சுரி மேட்ரஸின் நிறுவன தூதராக பிவி சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தெலுங்கானாவின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட செஞ்சுரி மேட்ரஸ் நிறுவனமானது ஜெல் மற்றும் உயிரிதொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய வகையிலான மெத்தைகளை அறிமுகப்படுத்திய பின்னர், புகழ்பெற்ற இந்திய பேட்மின்டன் வீராங்கனையான பிவி சிந்துவை அதன் நிறுவன தூதராக சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இவரின் சிறப்பான மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகள் மூலம் நிறுவனத்தின் விளம்பர மேலாண்மையை உறுதிப்படுத்துவார் என்ற நோக்கத்துடன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன நிர்வாக இயக்குனர் உத்தமலானி தெரிவித்துள்ளார்.

Cloud4C நிறுவனத்தின் இந்திய பிராந்தியத்திற்கான விற்பனையின் புதிய தலைவராக அரிந்தம் முகர்ஜி நியமனம்.

  • உலகளவில் புகழ்பெற்ற மற்றும் முன்னணியில் நிர்வகிக்கப்படும் கிளவுட் சேவை வழங்குநரான Cloud4C நிறுவனத்தின் இந்திய பிராந்தியத்திற்கான புதிய விற்பனைத் தலைவராக அரிந்தம் முகர்ஜி ஆகஸ்ட் 2023 இல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தொழில்நுட்ப துறையிகள் பல்வேறு அனுபவம் கொண்ட இவர் தனது சீரிய முயற்சிகளின் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

US Polo நிறுவனத்தின் நிறுவன தூதராக பலக் திவாரி நியமனம்.

  • USPA நிறுவனமானது தனது நிறுவன விளம்பர தூதராக புகழ்பெற்ற இந்திய பிரபலமான பலக் திவாரியை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் முதல் உலகளாவிய பெண் தூதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த நியமனமானது நிறுவனத்துடனான அவரது தொடர்பு, அவரது பாணி, கவர்ச்சி மற்றும் நவீன அழகு கலாச்சாரத்தை உள்ளடக்கியது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி-காரக்பூர் கவர்னர் குழுவின் புதிய தலைவராக டி.வி.நரேந்திரன் நியமனம்.

  • டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டி.வி.நரேந்திரன் அவர்களை, ஐஐடி-காரக்பூரின் கவர்னர்கள் குழுவின் புதிய தலைவராக நியமித்துள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • தொழில்துறை மேலாதிக்கத்தை பார்க்கும் ஒரு மனிதனாக, நரேந்திரன் சமூகத்தின் தேவைகளையும், சமுதாயம் மற்றும் தொழில்-கல்வித்துறையை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைப்பதன் முக்கிய நடவடிக்கை பணிகளை இவர் இந்த நியமனத்தின் மூலம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக புனித் டால்மியா நியமனம்.

  • டால்மியா சிமென்ட்  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள் குழுவானது ஆகஸ்ட் 29, 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நியமனம் மற்றும் ஊதியத்திற்கான குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, அதன்  MD & CEO ஆக புனித் டால்மியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இவர் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான மகேந்திர சிங் அவர்களின் பதவி உயர்விற்கு அடுத்தப்படியாக இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் டிசம்பர் 8, 2023 இவர் இந்த பொறுப்பை ஏற்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புத்தக வெளியீடு

“முன்னோக்கி நகர்வோம்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

  • மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களால், “முன்னோக்கி செல்வோம்” என்ற தலைப்பில் ஒரு நாவல் புத்தகத்தை ஆகஸ்ட் 29, 2023 அன்று புது தில்லியில் உள்ள கௌஷல் பவனில் வெளியிட்டுள்ளார்.
  • இந்த புத்தகமானது NCERT மற்றும் UNESCO ஆகிய அமைப்புகளால் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கதைசொல்லல் மூலம் மாணவர்களை மகிழ்விக்கும் அதே வேளையில் முழுமையான 100% நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த புத்தகமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய தினம்

உலக சமஸ்கிருத தினம் 2023

  • பண்டைய இந்திய மொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதத்தை போற்றி மதிப்பளிக்கும் வகையிலும் அதன் பன்முகத்தன்மையை உலகறிய செய்வதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 ஆம் நாளானது உலக சமஸ்கிருத தினமாக கொண்டாடப்படுகிறது.
  • பல தற்போதைய இந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியுள்ளன என்பதும் வட மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பல புராணங்கள் மற்றும் நூல்களும் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 2015 ஆம் ஆண்டு சம்ஸ்கிருத மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்க்கப்படுகிறது.

மலேசிய சுதந்திர தினம்

  • ஆங்கிலேய பேரரசின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயா கூட்டமைப்பானது 1957 ஆகஸ்ட் 31 அன்று சுதந்திரம் அடைந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 ஆம் நாளானது ஹரி மெர்டேகா அல்லது மலேசிய சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இது அந்நாட்டின் மலாயா கூட்டமைப்பின் சுதந்திரப் பிரகடனத்தை நினைவுகூருவதாக அமைகிறது மேலும் இது மலேசிய அரசியலமைப்பின் 160வது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!