UPSC IES / ISS 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
UPSC IES / ISS 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 2023ம் ஆண்டு நடைபெற்ற UPSC IES / ISS 2023 தேர்வுக்கான இறுதி முடிவுகளையும், மதிப்பெண் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

UPSC தேர்வு முடிவுகள்:

இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்திய புள்ளியியல் சேவை (ISS) துறைகளில் Junior பிரிவின் கீழ் வரும் பதவிகளுக்கு என ஒதுக்கப்பட்ட 51 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது UPSC தேர்வாணையத்தால் 19.04.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் UPSC IES / ISS 2023   எனும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டிருந்தது. இதன்படி, UPSC IES / ISS 2023 எழுத்து தேர்வானது 23.06.2023 அன்று நடத்தபட்டு முடிவுகளானது 24.08.2023 அன்று வெளியிடப்பட்டது.

இவ்வாறு தேர்வு செய்யப்பட நபர்களுக்கு நேர்காணலானது 18.12.2023 அன்று முதல் 19.12.2023 அன்று வரை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது 24.01.2024 அன்றும், மதிப்பெண் பட்டியாலானது 29.01.2024 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!