யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. மூலம் ஆண்டுதோறும் நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பை மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 24.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | CSE |
பணியிடங்கள் | 712 |
கடைசி தேதி | 24.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC பணியிடங்கள் :
UPSC ஆணையத்தின் அறிவிப்பில் இந்த சிவில் சர்வீஸ் பணிகளுக்கு என 712 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.08.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
TN Job “FB Group” Join Now
UPSC கல்வித்தகுதி :
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தாலே போதுமானது ஆகும்.
UPSC தேர்வு செயல்முறை :
முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலை சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- Female/ SC/ ST/ Persons Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.03.2021 முதல் 24.03.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.