குறைந்த வட்டியில் உடனடி கடன் வேணுமா..?? விரைவில் அமலுக்கு வரும் UPI கிரெடிட் லோன்..!!
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) இந்தியாவில் 2016 இல் தொடங்கப்பட்டது. மேலும், அறிமுகமான சில வருடங்களிலேயே டிஜிட்டல் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் சிறிய முதல் பெரியளவிலான தொகையை எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் UPI-க்கான அடுத்த பெரிய அம்சமாக கிரெடிட் லைன் வசதியின் ஒருங்கிணைப்பு அமைவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்.. வெளியான முக்கிய தகவல்..!!
இவை கிரெடிட் கார்டுகளைப் போலல்லாமல், தினசரி செலவுகளுக்கு குறுகிய கால கடன்களை குறைந்த வட்டியில் வழங்குக்கின்றன. இது லட்ச கணக்கான இந்தியர்கள் முறையான கடன் கட்டமைப்பிற்குள் கொண்டு வரக்கூடும் என்றும், வெளிப்படையான பரிவர்த்தனைகளை UPI மூலம் பாரம்பரிய கடன் மாதிரிகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக அமைக்கூடும் என்று ரிசர்வே வங்கி தெரிவிக்கிறது. மேலும், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அமைப்புடன் இணைந்து நிகழ்நேர மோசடி கண்டறிதலுக்கான AI-ஐப் பயன்பாடு, blockchain தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களில் முதலீடுகள் என எதிர்கால அடித்தளத்தை மேலும் உறுதிப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.



























