இனி தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்.. வெளியான முக்கிய தகவல்..!!
பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பலதரப்பட்ட நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21(A) பிரிவின் கீழ், கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act) ஆனது 2010 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
Flipkart நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025 – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!
அதாவது, தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது “இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு LKG மற்றும் 1-ம் வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை பணிகளை மே 29-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது”. இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை கோரும் “குழந்தைகளின் பெற்றோர் http://www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், LKG வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021 தேதிக்குள்ளும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.



























