மாதம் ரூ.5,550 வழங்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் – சிறந்த சேமிப்பு திட்டம் இதோ!
இந்தியாவில் தற்போது மக்கள் வங்கிகளை போல அஞ்சலகத்திலும் கணக்கு தொடங்கி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு வழங்குகிறது. மேலும் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்து வருகிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மேலும் அஞ்சலகத்தில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மற்ற திட்டங்களை விட கூடுதல் வட்டித்தொகை கிடைக்கிறது. அதனால் மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Flipkart நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025 – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!
1000 ரூபாய் முதலீடு செய்வது போன்ற திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 7.4% வட்டி கிடைக்கும். தனி கணக்கு தொடங்கினால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது ஒரு நல்ல வாய்ப்பு. கூட்டு கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 7.4% வட்டி விகிதத்தில் 5,500 ரூபாய் கிடைக்கும். 9 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மொத்த வட்டி 3,33,000 ரூபாய். 5 வருடம் மாதம் 5,550 ரூபாய் வழங்கப்படும்.


























