
மாணவர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்…!! தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை..!! வெளியான சூப்பர் தகவல்…!!
விடுமுறை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைவது வழக்கம். ஏனெனில், அன்று தான் அனைவரும் தங்களுக்கு பிடித்த விசயங்களை செய்யவும், பிடித்த ஊர்களுக்கு செல்லவும் முடியும். இதுவே, தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். அனைவரும் படு குஷி ஆகிவிடுவார்கள். அந்தவகையில், தற்போது தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழகத்தில் மார்ச் 29 மற்றும் 30 (சனி மற்றும் ஞாயிறு) வாரவிடுமுறை நாட்களாகும். அத்துடன் மார்ச் 31 ம் தேதி ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால் அன்றும், அதற்கு மறுநாள் ஏப்ரல் 1 புது வருட கணக்கு திறக்கும் நாள் என்பதால் அன்றும் அரசு விடுமுறையாகும். எனவே, தொடர்ந்து 4 நாட்கள் தமிழக மக்களுக்கு தொடர் விடுமுறை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

























