இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி .. 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை..!!

0
??????? - ?????????? ???? ??????? ??????? .. 54 ?????????????? ????? ???????? ?????????? ???????..!!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி .. 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை..!!

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி .. 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை..!!

ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. எனவே எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி இந்த ஒத்திகையை நாளை (07-04-2025) நடக்கவிருக்கிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

மேலும், “நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடக்க உள்ள 244 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கல்பாக்கத்தில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (06-05-2025) பிரதமர் மோடியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திக்கவுள்ளார். இந்த சந்திதிப்பில் போர் பாதுகாப்பு ஒத்திகை பற்றிய ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், “கடைசியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் 54 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை பெறவுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!