தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை.. வெளியான திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன தெரியுமா..??
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்கள் அல்லது சுவாமி வழிபாடுகளின் போது, அப்பகுதியை சார்ந்த மக்களிடையே எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலின் திருத்தேரோட்டம் நாளை (07-05-2025) நடைபெறவுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி .. 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை..!!
இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள் என்பதால் நாளை அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை விடுக்கப்படுவதாக ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே மாதம் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என தெரிவித்துள்ளார்.



























