
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த முயலும் இந்திய அரசு…!! மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்ட சிறப்பு தகவல்..!!
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி என்பது உலகின் முன்னணி சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளாகும். இதில் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இப்போட்டிகள் 1896 ஆம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2036 ஒலிம்பிக் போட்டி குறித்து முக்கிய தகவல் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார்.
பெண்களே..உங்களுக்கு சொந்த தொழில் தொடங்க ஆசையா…?? அப்போ மத்திய அரசின் இந்த சலுகைகளை பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!
அதாவது, “2036 ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்த தீவிரமாக முயன்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உலகத்தரம் வாய்ந்த 10 பெரிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஏலத்தில் இந்தியா வென்றால், வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

























